Description
ஓர் எழுத்தாளரை ஒரு வாசகர் இந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்தொடர
முடியுமா? அவரது எல்லாப் படைப்புகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் நுட்பமாகப்
படிக்க முடியுமா? படித்ததினின்றும் தனக்கான பார்வையை
உருவாக்கிக்கொண்டு அதைத் தெளிவாக முன்வைக்க முடியுமா? அந்த
எழுத்தாளரின் ஆக்கங்களில் உள்ள வகைமைகள், கூறுமுறைகள்,
நுணுக்கங்கள், கலைத்திறன், மொழித்திறன், பார்வைகள், இலக்கிய உத்திகள்
ஆகியவற்றைத் துல்லியமாக விளக்கிவிட முடியுமா?
மு. இராமனாதனின் 'இது முத்துலிங்கத்தின் நேரம்' என்னும் இந்த நூலைப்
படித்தால் மேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் 'ஆம்' என்று உறுதியாக
விடையளிக்க முடியும். முத்துலிங்கத்தின் எழுத்துலகம் மேற்பார்வைக்கு
எளிமையானதாக இருந்தாலும் உள்ளார்ந்த அடர்த்தியும் ஆழமும் கொண்டது.
அவற்றைத் துலக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறார் ஆசிரியர். ஓர்
எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலேயே இப்படி ஒரு வாசகர் கிடைப்பது
அபூர்வமானது என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.