Description
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் நாமும் இக்கவிதைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதைக் கடந்து விடுகிறோம்.
– யவனிகா ஸ்ரீராம்