Description
தர்க்கம், விவாதம் ஆகியவற்றின் மூலம் உண்மையையும் நீதியையும் உணர்ந்தும் உணரச் செய்தும் அவற்றின் வழி ஒழுகுவதும் பவுத்த வாழ்வியல் நெறி. மாறாக வன்முறையின் மூலமாகவும் சதிச் செயல்களின் மூலமாகவும் நியாயமற்ற ஒன்றை நடைமுறைப்படுத்தி அதற்கு காவலாக கடவுளை நிறுத்தி வைப்பது சாதி இந்துக்களது நெறி. உண்மையையும் நியாயத்தையும் தவிர்த்துவிட்டுப் பாராமுகமாய் இருக்கும் வரையில் தான் தமது அதிகாரம் செல்லுபடியாகும் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். அப்படிப் பாராமுகமாய் இருப்பதாலேயே இருக்கும் உண்மைகள் இல்லாமல் போய்விட மாட்டா. அருந்ததியர் குறித்த உண்மைகளுக்கும் இது பொருந்தும்.