Description
சுதந்திரம் பெற்ற காலத்தில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் தமிழக ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சட்டசபையை நம்பிய காலத்திலிருந்து சட்டமன்றத்தில் அங்கத்துவம் வகித்து ஆற்றிய உரைகளே இத்தொகுப்பாகும்.
வட்டாரம், சாதி, மொழி, வர்க்க பேதமற்று ஒடுக்கப்படும் மக்களின், குரலற்ற மக்களின் குரலாக ஒலித்திருப்பதை இத்தொகுப்பில் காணமுடிகிறது. குற்றப்பரம்பரையினர், மீனவர், வேளாண்குடியினர், ஒடுக்கப்பட்ட, பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், ஏதிலிகளாக ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பிரதிநிதியாக இருந்து, தமது உரையின் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்தை தம் பக்கம் திருப்பி உள்ளார்.