Description
சோழநாட்டுச் சரித்திரத்தில் நெஞ்சை உலுக்கும் முக்கிய நிகழ்வு ஆதித்த கரிகாலனின் அகால மரணம். ‘வானுலகைப் பார்க்கும் ஆசையில் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்த வேளையில் உலகில் கலி எனும் காரிருள் சூழ்ந்தது’ என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் படுகொலையைச் செய்தவர்கள் ‘ரவிதாசனின் சகோதரர்கள்’ என்று உடையார்குடி கல்வெட்டுகளும் சொன்னாலும் இந்த மர்மக்கொலைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. உடையாளூரில் ஆரம்பித்து உடையார்குடி கண்டி பீகிங் என்று கொலையாளியைத் தேட அதனை யாரோ தடுக்க முயல அமானுஷ்ய சக்தியின் உதவியால் அந்த மர்மமுடிச்சுகள் வெளியாவதாக அற்புதமாகப் புனையப்பட்டுள்ளது.. தற்பொழுது பயன்படுத்தபடும் நுணுக்கமான குற்றவியல் ஆய்வுமுறைகளைக் கொண்டு ஆதித்தக்கரிகாலனின் கொலை புலனாய்வை கொஞ்சம் கொஞ்சமாகத் திகிலுடன் சொல்லும் இந்தப் புதினம். குற்றச்சரித்திர கதைகளில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். மகள் விரும்புபவன் இறந்து விடுவன் என்று அறிந்த தந்தை படும்பாடும் அதை சமாளித்து வெற்றி பெற்ற விதமும் பற்றிய கவிதைத்துவமாக சொல்லப்பட்டுள்ள இந்தப்புதினம் படிப்பர்வகளை நிச்சயம் ஈர்க்கும்.