மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தனிதனிச் சட்டங்கள் மூலம் நிர்வகிப்பது நடைமுறையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது எனக் கருதி தமிழக அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு பொதுவாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும்? நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறது? அதை எப்படி செயல்படுத்த வேண்டும்? போன்ற விவரங்கள் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் முதலில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ஐ முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-ஐ படிக்க வேண்டும். ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 என்ற சட்ட நூலானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை நீங்கள் வாங்கிப் படித்திருப்பீர்கள். இந்த சட்ட நூலைப் படித்தால் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது.