Description
பள்ளியில் சேட்டை செய்யாதவர்கள் யார்? ஆசிரியர் எத்தனை சுவையாய்ப் பாடம் நடத்தினாலும் அடுத்த பெஞ்சில் அமர்ந்திருக்கும் வேலுவுக்கோ நந்தினிக்கோ உடனடியாய் சீட்டுக் கொடுத்தே ஆக வேண்டிய தலை போகும் அவசரத் தேவை அறியாதவர்கள் யார்? அதைப் புலிபோல் பாய்ந்து கைக்கவரும் ஆசிரியர் புரியாத மொழியில் எழுதிய சேட்டைச் செய்தியைக் கண்டு திக்குமுக்காடுவதை உள்ளமே மலர்ந்து பூரிப்புடன் எதிர்கொள்ளும் அனுபவமும் உண்டா?