சங்க இலக்கியம் - ஒரு புதிய கண்ணோட்டம்


Author: பாலசுத்தரம் இளையதம்பி

Pages: 547

Year: 2023

Price:
Sale priceRs. 580.00

Description

சங்க இலக்கியம் பற்றியும், சங்கத் தமிழரின் வாழ்வியல், பண்பாடு, தொல் வணிகம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு
விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசும் நூல் இது. இதனை 'பதினேழு தலைப்புகளில் ஓர் ஆய்வு நூலாக எழுதியுள்ளார் இந்நூலாசிரியர் பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி. ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள கட்டுரைகள் இந்நூலை
சிறப்பிக்கச் செய்கின்றன. சங்க இலக்கியத்தின் ஆழ அகலங்களை, அதன் அரும்பெருமை களை, தனிச்சிறப்புகளை, காலத்தொன்மையை, கருத்து வளமையை, பழந்தமிழர் புலமையை ஆய்வு செய்து புதிய கண்ணோட்டத்துடன்
இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறார் இதன் ஆசிரியர். இது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சங்க இலக்கியம், தமிழர் பண்பாடு தொடர் பான ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்கள் போன்ற அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தவிர, இந்நூல் வழியாக அனைவருமே தமிழரின் தொன்மை வரலாற்றை, சங்கக் கால செய்திகளை படித்து மகிழலாம்.
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

You may also like

Recently viewed