ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்


Author: திருமுருக கிருபானந்த வாரியார்

Pages: 1040

Year: 2023

Price:
Sale priceRs. 975.00

Description

முன்னுரை முழுமுதற் பரம்பெருளாகிய முருகவேளுடைய இனிய கனியமுதமன்ன புகழ் திருப்புகழ் எனப்படும். ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு முருகவேள் பரம ஞானியாகிய அருணகிரிநாதரை நோக்கி, “நீ திருப்புகழ் பாடு” என்று பணித்தருளினார். அருணகிரிநாதர் அறுமுகப் பெருமான் அருட்டிறத்தை மேற்கொண்டு பதினாறாயிரம் திருப்புகழைப் பாடியருளினார். திருப்புகழ், கற்பாரைப் பிறவிக் கடலினின்றுங் கரை சேர்க்கும் பெருந்திருத்தோணி. காலப்போக்கில் ஆங்காங்கு ஓலைச்சுவடிகளைப் போற்றுவார் அற்று, பல பாடல்கள் மறைந்து விட்டன. வடக்குப்பட்டு உயர்திரு. வ.த.சுப்பிரமணியபிள்ளை அவர்களும், அவர்களுடைய திருமைந்தர் உயர்திரு. வ.சு.செங்கல்வராய பிள்ளை அதேடி அரும்பாடுபட்டு திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து ஒழுங்கு செய்து 1311 பாடல்களை 3 பகுதிகளாக வெளியிட்டனர். எனது உழுவலன்பர் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த திருநெல்வேலி வீ. சங்கரன் பிள்ளையவர்கள் திருப்புகழ் முழுவதையும் அடக்க விலைப் பதிப்பாக 1961-ல் வெளியிட்டனர். பின்னர், திருப்புகழமிர்தம் காரியாலயத்தார் இருமுறை வெளியிட்டனர். அவை முழுவதும் செலவாகி விட்டன. எல்லோரும் திருப்புகழை ஓதி எல்லாம்வல்ல முருகப் பரம் பொருளின் திருவருளைப் பெறுவார்களாக. எங்கும் சிவநெறியும் எந்தை புகழும் பரவிச் சிவானந்தம் விளைவதாக.

You may also like

Recently viewed