Author: அன்ரன் பாலசிங்கம்

Pages: 256

Year: 2022

Price:
Sale priceRs. 250.00

Description

என்ன காரணத்திற்காக இப்படிப் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று கேட்ட்டார் எம்.ஜி.ஆர் நாம் தனித்துவமான போக்குடையவர்கள் என்பது இந்திய அரசுக்குத் தெரியும் அத்தோடு வரித்துக்கொண்ட இலட்சியத்தில் நாம் உறுதியாக நிற்போம் என்பதும் அவர்களுக்குத் தெரிய்ம் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் இரகசியத் திட்டங்களுக்கு இசைந்து போய் வளைந்து கொடுக்கமாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும் ஏனைய அமைப்புகள் அப்படியல்ல அவர்களுக்கு உறுதியான இலட்சியம் எதுவுமில்லை இந்திய அரசின் அழுத்தங்களுக்கு அவர்கள் பணிந்து சென்று வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் இதன் காரணமாகவே ஏனைய போராளி அமைப்புகளை இராணுவ ரீதியாக பலப்படுத்தி விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய அரசு முனைகிறது என்று விளக்கினேன்

எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாகவும் பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.எல்லாம் எனக்குப் புரிகிறது இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் எத்தகைய உதவியை என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று கேட்டார்

You may also like

Recently viewed