குழந்தைகள் உளவியலைப் புரிந்து, அன்றாட நிகழ்வுகளை, சமூகப் பிரச்சனைகளை கதைகள் வழியே அவர்கள் கைகளில் கொண்டு சேர்த்தல் இன்றைய அவசியத் தேவை. தமிழ்ச் சிறார் மனங்களில் நல்லுணர்வைத் தூண்டுதலும், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணத்தை வளர்ப்பதும் கதைகள் செய்யும் வித்தைகளில் ஒன்று.