ஏழாவது உடை - கதையுருவாக்கக் கதைகள்


Author: பிரேம்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 320.00

Description

பிரேம் எழுதிய இந்தக்கதைகள் வழக்கமான கதை கூறும் தன்மையிலிருந்து விலகியவை. பின்நவீனத்துவ இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையான கலைத்துப்போடும் விளையாட்டை முன்நிறுத்தும் வடிவத்தைக்கொண்டவை. சிறுகதை, நீள்கதை, குறுநாவல் போன்றஆகிவந்தவடிவங்களுக்கு எதிரான புதிய வடிவத்தையும் புதுவகை எழுத்தையும் இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. தனி மனிதர்களுக்குள்ளிருக்கும் பிராந்திய வரலாற்றையும் பிராந்தியத்திற்குள்ளிருக்கும் தனி மனிதனின் கதையையையும் சுயபுராணம், புனைவு, வரலாறு ஆகிய வடிவங்களில் முன்வைப்பதில் வெற்றியடைந்த படைப்புகள் இவை. வரலாற்றின் அடுக்குகளில் மறைந்திருக்கும் புனைவுக்கான சாத்தியங்களைக் கதையாக்குகிறார் பிரேம். தந்தைக்கும் மகனுக்கும் தந்தைக்கும் மகளுக்குமான உறவுகளின் நுட்பமான பரிமாணங்களை இக்கதைகள் தொடுகின்றன. இந்தக்கதைகளுக்குள் பிரெஞ்சும் புதுவையும் காலத்திலும் வெளியிலும் இணைந்து புதுவகை நிலத்தைத் தரிசிக்கச் செய்கின்றன.

You may also like

Recently viewed