கள்ளி 2-ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - ஐந்தாம் பரிசு


Author: வா. மு. கோமு

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 270.00

Description

கொங்கு வாழ்நிலத்தின் சமீபத்திய வாழ்வியல் முறைமையை அச்சு அசலாக நம் கண்முன் விரித்து வைக்கிறது இந்த நாவல். இதில் தலித்திய வாழ் மக்களின் வாழ்க்கை முறைமைகளும் கால வளர்ச்சிக்கேற்ப மாறி நிற்கின்றன. இருந்தும் சாதியக்கூறுகளை இந்த மண் தன்னகத்தே மறக்காமல் வைத்திருக்கிறது என்பதை கனிந்த வாழைப்பழத்தினுள் ஊசியை ஏற்றுவது போன்றே இந்த நாவலும் வாசகனின் மனதினுள் ஆழமான ஆதிக்க மனநிலையைப் போகிற போக்கில் ஏற்றிவிடுகிறது. மனிதர்கள் அவரவர்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் சென்றாகவேண்டும். அது பாதிவரையோ அல்லது இறுதிவரையோ வாழ்க்கையானது கைபிடித்து கூட்டிச்செல்கையிலும் கூட. இந்த நாவலை ஒரு கற்பனைப் படைப்பு என்பதை யாரும் அவ்வளவு எளிதாக நம்பிவிட இயலாதுதான்.

You may also like

Recently viewed