Description
நவீன தமிழ்க் கதையாடல் இன்றைய கால கட்டத்தில் கண்டிருக்கும் வீச்சு மிக முக்கியமானது. இம்மூன்று குறுநாவல்களிலும் யதார்த்த உளவியல் சிக்கல்கள் வாழ்வின் விளிம்பு கோடு தாண்டி அட்சரம் மீறாமல் சித்தரிக்கப்படுகிறது. மீசை அதன் குறியீடாகப் பார்க்கிறேன். மொழியின் சாட்சியங்கள் வாழ்வியலைப் பின்னும்போது இருளும் வெயிலும் கட்டிய ஒரு இருள் படுக்கையை ஒத்திருக்கிறது. வாழ்வின் புதிர்களைப் புனைவில் அவிழ்க்க முயலும் அத்தனை கூறுகளும் இலக்கியத்தின் mystical thresholdஐ விரிவாக்குகின்றன. மூன்று குறுநாவல்களும் இதன் சான்றுகளே.
- எழுத்தாளர் தமயந்தி