Description
இந்நாவல் முழுக்க வேடிக்கையும் வினோதமான பார்வையும், திகைக்க வைக்கிற ஜென் திறப்புகளும் விரவிக்கிடக்கின்றன. சில பல குரூர எதிர்நிலைகளுக்கும் நாவலில் குறைச்சலில்லை. யுவனின் உதிரிக்கதைகள் இலக்கியத்திற்கே உரித்தான ஒரு சாய்வெழுத்தை (disorted and oblique writing) அபாரமான கலை நுணுக்கத்த்துடன் வாக்கியத்துக்கு வாக்கியம் முன்வைக்கின்றன. கடந்த பதினைந்து வருடங்களில் நான் வாசித்த தமிழ் நாவல்களில் மிகவும் முக்கியமான ஒன்று யுவன் சந்திரசேகரின் ‘மணற்கேணி’. அவரே ‘மணற்கேணியை நாவல் என்றழைக்கக்கூடாது. அது உதிரிக் கதைகளின் தொகுப்பு எனக் கூறினாலும் அதை நாவல் போல ஒன்று என வைத்துக்கொள்ளலாம். உலர் திராட்சையை கிஸ்மிஸ் என்று அழைப்பதால் அது திராட்சை இல்லை என்றாகிவிடுமா , என்ன?
- எம்.டி.முத்துக்குமாரசாமி