Description
இந்நாவல் மீது மெல்ல செவிசாய்த்து ஒட்டுக் கேட்டால் ரயில் ஓடும் "தடக் தடக் சத்தமும், பச்சை பசேலென நீளும் புல்வெளிகளும், வயல்வரப்புகளும், கணவாய் அடுத்து பாறைகளினூடே ஒரு ராட்சசனின் நீல நாக்கைப்போல் நீண்டு கொண்டே போகும் ஒற்றையடி செம்மண் பாதையும் அதிலே ஓரிரண்டு குதிரை வண்டி சத்தமும், இரு மருங்கே ஒன்றை ஒன்று பிடித்துத் தள்ளிக் கொண்டு குதித்தோடும் சிற்றோடைகளின் அழகும் கண் முன்னே விரியும். கதையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால் "ஜமீலா" என்னும் அழகு தேவதை முன்னிற்பாள்.