Description
அசாத்தியமான செயல்களைச் செய்யும் சாகசக்காரர்கள் இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களின் செயல்களைக் கண்டு வியந்து போகின்றது வியனுலகம்.
அப்படிப்பட்ட ஒரு சாகசக்காரன் தான் அலெக்சாண்டர் செல்கிர்க்கு. ஸ்காட்லாண்டில் லார்கோஸ் எனும் கடற்கரை குக்கிராமத்தில் பிறந்தவன், வறுமையின் காரணமாக இளம் பிராயத்திலேயே கப்பல் பயணங்களில் சென்று பொருள் சேர்த்தான். ஒருமுறை அவ்வாறு செல்லுகையில் கப்பல் தலைவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு யுவான் ஃபெர்னான்டஸ் எனும் தீவில் தனிமையில் இறக்கிவிடப்பட்டான். அத்தீவில் அவன் நாலு வருடங்கள் நாலு மாதங்கள் தனிமையில் வாழ்ந்துகாட்டி சாகசம் புரிந்தான். அவனைப் பற்றிய சுவாரசியமான கதையே இப்புத்தகம், ராபின்ஸன் க்ரூஸோ எனும் கற்பனைப் பாத்திரம் பிறப்பதற்கு காரணமாய் இருந்த உண்மையான நாயகன்.