Description
* காலிஸ்தான் என்பது என்ன? இந்தியாவில் இந்தப் பிரிவினைவாதம் தலைதூக்கியது ஏன்?
* காலிஸ்தான் தீவிரவாதிகள் உருவாக யார் காரணம்?
* காலிஸ்தானுக்கும் சீக்கிய மதத்துக்கும் என்ன தொடர்பு?
* இந்திரா காந்திக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் என்ன பிரச்சினை?
* ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்னும் பொற்கோவில் நடவடிக்கையில் நடந்தது என்ன?
* காலிஸ்தான் பற்றிய உலகளாவிய அரசியல் நிலைப்பாடு என்ன?
இப்படி காலிஸ்தான் பற்றியும் சீக்கிய மதத்தைப் பற்றியும் அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறார் விதூஷ்.
சீக்கிய மதத்தின் தொடக்கக் கால வரலாறு, சீக்கிய குருக்களின் வரலாற்று வரிசை மற்றும் அவர்களது வாழ்க்கை, சீக்கியர்கள் தங்கள் மதம் மீதும் நிலம் மீதும் வைத்திருக்கும் மாறாக் காதல், சீக்கியர்கள் அரசியல்வாதிகளால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் , ஏன் சீக்கியர்கள் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்கள் என அனைத்தையும் விளக்கும் வரலாற்று நூல் இது. ஆய்வுபூர்வமாக ஆழமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருக்கிறது. சீக்கிய மதம் குறித்தும் காலிஸ்தான் பிரிவினைவாதம் குறித்தும் இப்படி ஒரு நூல் தமிழில் இதுவரை வந்ததில்லை.
இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்கள் எப்படித் தலைதூக்குகின்றன, அவற்றை ஒடுக்க இந்திய அரசு எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை விளக்கவும் இப்புத்தகம் தவறவில்லை.