Description
-நகரங்களில் நாம் காலை நேரங்களில் வண்டிகளில் கடக்கும்போது, வேலைக்கு அழைப்பவர்களை எதிர்பார்த்து ஆங்காங்கே ஆணும் பெண்ணும் கூட்டமாக நிற்பதைப் பார்த்திருப்போம். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், இவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கிறது, இவர்களுக்கும் கனவுகள், உணர்ச்சிகள் உண்டா என்பதையெல்லாம் யோசித்திருக்கிறோமா? இந்த மனிதர்களின் உண்மைக் கதைகளை அணுக்கமாக நின்று சொல்கிறது இந்தப் புத்தகம்