Description
ஊர்க்குளத்திலும் ஏரியிலும் நீச்சலடித்துக்கொண்டிருந்த பதிமூன்று வயது திவ்யாவுக்கு நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கிடைத்த வெற்றி இன்னும் பெரிய போட்டிகளில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. தனது உடல் ஊனத்தைத் தாண்டிச் செல்லும் மனவலிமையை அவள் பெறுகிறாள். அம்பிகா என்ற சினேகிதியும் அவளுக்குக் கிடைக்கிறாள். இந்த நட்பு திவ்யாவிடம் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. திவ்யா பெற்ற வெளி அனுபவங்கள் அவளை எங்கு கொண்டுசென்றன? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.