Description
கல்விக்கதைகள் என்கிற இந்நூலில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி சார்ந்தும் குழந்தைகள் சார்ந்தும் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அப்படைப்பாளிகளின் பள்ளிக்கால மலரும் நினைவுகளாக அல்லாமல் நம் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த விமர்சனங்களாகவும் குழந்தைகளின் மன உலகைத்திறப்பதற்கான கடவுச்சொற்களாகவும் அமைந்துள்ளன.