Description
குழந்தைகளை உளவியல் அடிப்படையில் உள்வாங்கிக் கொண்டு வளர்த்தெடுப்பதற்கான மனப்பக்குவம் தேவை. மேலும், அவர்கள் மன அழுத்தத்தோடு பயணிப்பதை முற்றிலும் அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.குறிப்பாக, இயற்கையோடு இயற்கையாகச் சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை அமைத்துத் தருதல் வேண்டும். மேலும், அவர்கள் பொறுப்புமிக்க ஆளுமைகளாக இச்சமூகத்தில் நடமாட வைப்பது என்பது நமது தலையாயக் கடமையாகும்.