Description
வல்லபாய் படேல் விடுதலைப் போரை முன்னின்று நடத்திய தளபதி மட்டுமல்ல, விடுதலை பெற்ற நவ இந்தியாவை நிர்மானித்த சிற்பியும் ஆவார். ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்கப்பாடுபட்ட படேல் தனது பதவியைப் பற்றி ஒரு போதும் கவலைப்பட்டது இல்லை. இந்தியாவின் சமஸ்தான மன்னர்களை ஒழிக்காமல் சமஸ்தானங்களை ஒழித்ததைப் பற்றி ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருஷேவ் இந்தியாவுக்கு 1956 இல் சுற்றுப் பயணம் வந்தபோது மிகவும் வியப்படைந்து படேலைப் பாராட்டினார். விடுதலைப் பெற்ற இந்தியாவை எல்லா துறையிலும் முன்னேற்ற விரைந்து பாடுபட்டவர் சர்தார் வல்லபாய் படேல் என்பதை வரலாற்றை கூர்ந்து நோக்கிய எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. தலைமுறைத் தாண்டிய சர்தார் வல்பாய் படேலின் வரலாற்று நினைவலைகளை நகர்த்தி முன் நிறுத்தும் முயற்சியாகவே இந்நூல் உங்கள் முன் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.