புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்


Author: ஆயிஷா இரா.நடராசன்

Pages: 667

Year: 2020

Price:
Sale priceRs. 500.00

Description

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ புதுப்பொலிவுடன் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக தங்களின் கரங்களில் தவழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஆசிரியர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, தமிழாக்கம் செய்து, காலம்சென்ற மணவை முஸ்தபா அவர்கள் தமது மீரா பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிட்டு விற்பனை செய்து வந்தார்கள். மணவை முஸ்தபா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியும் மீரா பப்ளிகேஷன் உரிமையாளருமான திருமதி சௌதா அம்மையார் மற்றும் அவரது மகன் டாக்டர் செம்மல் அவர்களை அணுகி 100 பேர் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டோம். இந்த நூல் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும்,0 தாங்கள் வெளியிட்டு விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் பெருந்தன்மையுடன் எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனை செய்வதற்கு மனமுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். தற்போது 100 பேர் தமிழாக்கம் தங்களது கரங்களில் புதுப்பொலிவுடன் தவழ்கிறது. நூறு பேர்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பெறுவது எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Recently viewed