புகையிலை வரலாறும் வழக்காறும்


Author: இரா.காமராசு

Pages: 144

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்று அத்துறையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் . தமிழகம் நன்கறிந்த இலக்கியவா தியாகத் திகழ்கிறார். தாவரவழக்காறுகளில் ஆய்வுசெய்துவரும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனைத்தொடர்ந்து முனைவர் இரா.காமராசு, "புகையிலை: வரலாறும் வழக்காறும்" எனும் இந்நூலை எழுதியுள்ளார். வரலாற்றில் புகையிலை பெறும் இடம், அத்தாவரம் குறித்த விளக்கங்கள், புகையிலை குறித்த இலக்கியப் பதிவுகள், வழக்காறுகள் கூறும் புகையிலை குறித்த செய்திகள், புகையிலையிலிருந்து செய்யப்படும் பொருள்கள், வாய்ப் புகையிலை, புகையிலையால் ஏற்படும் நன்மை தீமைகள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். -பேராசிரியர் நா. இராமச்சந்திரன்

You may also like

Recently viewed