Description
அயன், கோ, அனேகன், ஆரம்பம், கவண், மாற்றான், வேலைக்காரன், தனிஒருவன், 180 ஆகிய படங்களின் மூலம் திரைக்கதையில் தனி முத்திரை பதித்த சுபா எழுதிய சூப்பர் டூப்பர் த்ரில்லர் நாவல்கள். ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.