Description
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவித்திரி பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்டதாக உள்ளது.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி கல்வி அளிப்பதும், சாதி வித்தியாசம் பாராமல் மனிதநேயத்துடன் மக்களுடன் இருப்பதையும் கொள்கையாகக் கொண்ட சமூகத் தந்தையும், தாயும் ஜோதிபாவும், சாவித்திரியும், முக்தாசால்வே, தாராபாய், ஃபாத்திமா என இந்தியாவின் கல்வி வரலாற்றில் முதலாவதாகப் பங்காற்றியவர்களின் வரலாறுகளை சுருக்கமாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.