உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?


Author: பாரதி புத்தகாலயம்

Pages: 64

Year: 2023

Price:
Sale priceRs. 80.00

Description

நாங்கள் அறிந்த வரையில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் ஊடகப் பயன்பாடு மற்றும் நுகர்வு அனுபவம் குறித்து ஆராயும் முதல் ஆய்வு இதுவே. ஊடகங்கள் எவ்விதம் பொதுக் கருத்துக்களையும் கற்பிதங்களையும் கட்டமைக்கின்றன என்றும் எவ்வாறு போலியான செய்திகளும் திரிப்புகளும் பரப்பப்படமுடியும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இருப்பினும் இந்த ஆய்வு ஊடக அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது. இந்தியாவில் தற்போது ஊடகத்திலிருந்து பொதுவாக வெளிப்படும் விலகி நிற்றல் தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளோம். நாங்கள் கண்டறிந்தது சுவையானதும் எச்சரிக்கை அளிப்பதும் ஆகும். அனுபவங்கள் எங்களைக் களப்பகுதியைத் தாண்டி மாறுபட்டதாக ஊடகங்களால் காட்டப்பட்டவற்றில் இருந்து பொருந்தாத தொலைவில் இருந்தும் சில பொதுவான கருப்பொருள்கள் வெளிப்பட்டன, அனைத்து வடிவ ஊடகங்களிலும் நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மை சார்ந்து தொடர்ந்த ஐயங்கள், தொழிலாளர்களின் உண்மை நிலையை பதிவு செய்வதற்கான ஆவல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகரமான தகவல்களை அளிப்பது.

You may also like

Recently viewed