இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் ஒரு வழிகாட்டி


Author: பாரதி புத்தகாலயம்

Pages: 72

Year: 2023

Price:
Sale priceRs. 90.00

Description

உழைக்கும் மக்கள் இந்த உலகத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியுள்ளனர். இவர்களின் உதிரமும், வேர்வையும் நகரங்கள், தேசங்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளது. உழைப்பின் முழு பயனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. உழைப்பின் பெரும்பகுதி எந்த உழைப்பும் செலுத்தாத முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது. இந்தியாவின் வளமான பகுதிகளான ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கார், பீகார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் அஸ்ஸாம் போன்ற வடமாநில மக்களின் பாரம்பரிய நிலம், காடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கனிமவளங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு, அந்தப் பகுதியில் பாரம்பரிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து, அந்நியமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிழைப்புக்காக வேலைதேடி தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி குவியத் தொடங்கியுள்ளனர். இங்குள்ள முதலாளிகளோ, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கு 16 மணி நேரத்திற்குமேல் கசக்கிப் பிழியப்படும் அவலம் நடந்து வருகிறது.

You may also like

Recently viewed