Description
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன மு. குலசேகரனின் இக்கட்டுரைகள். படைப்பு நுட்பங்களையும் ஆளுமைகளின் சித்திரங்களையும் தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். படைப்பாளியின் நிறை, குறைகளைத் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துரைக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த நூல்கள் அவருடைய ரசனையை எடுத்துக்காட்டுகின்றன. அவை அந்தந்த ஆசிரியர்களின் சிறந்த படைப்பாகவும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல. புனைகதை எழுத்தாளர் கவிதையின் மேல் கொண்டுள்ள ஈடுபாட்டையும் புனைகதையாளர் கவிதையைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் முன்வைத்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு.