Description
எழுத்தர் பணிக்காக மதராஸ் வந்தவர் ராபர்ட் க்ளைவ். பிறகு போர் வீரராகி வெற்றிகளைக் குவித்தார். அவரது வெற்றிகளே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசினை நிறுவ அடித்தளமிட்டன. அதைச் சாத்தியப்படுத்தும் அமைப்பாக இருந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. வழக்கத்துக்கு மாறாகத் தெற்கிலிருந்து ஆக்கிரமிப்பு தொடங்க உகந்த அரசியல் சூழல் அப்போது இந்தியாவில் இருந்தது. ராபர்ட் க்ளைவ் காலத்தில் ஆரம்பித்து எட்வர்ட் க்ளைவ் காலத்தில் ஏறக்குறைய தென்னிந்தியா முழுதும் ஆங்கிலேயர் வசமானது. கற்காலத்திலிருந்து இருந்து வரும் ‘மதராஸ்’ இக்காலத்தில்தான் நகரமாக உருமாற ஆரம்பித்தது. இன்றைய சென்னை, கருக்கொண்டு உருக்கொண்டு, காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு உருவாகி வளர்ந்த வரலாற்றை ராபர்ட் க்ளைவின் வாழ்வோடு இணைத்து விவரிக்கிறது இந்நூல்.
நூலாசிரியர் கோகிலா, ஒரு தொழில்முனைவர். மெட்ராஸ் பேப்பர், ஹர்ஸ்டோரிஸ் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். சில கிண்டில் நூல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. அச்சில் இதுவே முதல்.