Description
இன்றைய நவீன உலகில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது எளிதான விஷயமல்ல. அது காது குத்து விழாவாக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் விழாவாக இருந்தாலும் சரி. நிகழ்ச்சியை நடத்துவது என்பது இன்று ஒரு கலையாக மாறிவிட்டது. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற வார்த்தை இன்று புழங்காத இடமே இல்லை. திருமணம் தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மேலாண்மை நிறுவனங்கள் வந்துவிட்டன. நம்மைவிட சிறப்பாகத் திட்டமிட்டு, எவ்விதக் குறைகளும் இன்றி ஒரு விழாவை நடத்தித் தருகின்றன இந்த மேலாண்மை நிறுவனங்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டங்கள், திரைப்பட வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் என எந்த ஒரு விழாவையும் எப்படி நடத்த வேண்டும், அதில் நீங்கள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன, அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி, யார் யாரை விருந்தினராக அழைப்பது, விஐபிக்கள் கலந்துகொண்டால் கூட்டத்தை ஒருங்கிணைப்பது எப்படி, என்ன என்ன பொழுதுபோக்கு அம்சங்களை நிகழ்ச்சியில் வைக்கப் போகிறீர்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.