Description
பாரத மரபில் உள்ள தெய்வங்களின் கைகளில் நாம் பல ஆயுதங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தால், நமக்குச் சட்டெனப் பதில் சொல்ல முடியாது.
நம் தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன, அவற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும், வெவ்வேறு இறை உருவங்களின் கைகளில் ஏன் வெவ்வேறு ஆயுதங்கள் உள்ளன, நாம் வழிபடும் தெய்வங்கள் எப்பொழுதும் ஆயுதமேந்திதான் இருந்தனவா, இல்லை அவை காலப்போக்கில் வந்து சேர்ந்தவையா - இப்படிப் பல கேள்விகளை அலசுகிறது இந்தப் புத்தகம். தெய்வங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்.
சுமதி ஸ்ரீதரின் இந்த நூல் தெய்வங்களின் ஆயுதங்களை விவரிப்பதோடு, இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் பல மரபுகளையும் அதன் செழுமைகளையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது.