Description
தொழில், வர்த்தகம், நிர்வாகம் ஆகியத் துறைகளில் 66 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ள பத்ம ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் வரலாறு மற்றும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். அதனால்தான் பழைய இலக்கிய படைப்புகளில் இருந்து ஆன்மிகம், நீதிநெறி ஆகிய கருத்துக்களைத் எழுதியிருக்கிறார் தொகுத்து புத்தகங்கள்
பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி இவர் எழுதியுள்ள புனிதர் வரலாறுகள் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன. சித்தர்கள் பாடல்களில் ஈடுபாடு கொண்டுள்ள நூலாசிரியரின் 'சித்தர் ஞானம்' என்ற இந்த நூல் 20 சித்தர்களை பாமரர் களும் புரிந்துகொள்ளும்படி அறிமுகப்படுத்துகிறது, அவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள் மூலம் சித்தர் இலக்கியத்தில் இது குறிப்பிடத்தக்க புதிய வரவு.