Description
“திருவாசகத்தைப் பற்றி எழுதேன். அதற்குரிய சூழலை உருவாக்கித் தருகிறேன்” - ஒரு புறம் பச்சைப்புடவைக்காரியின் கட்டளை. மறுபுறம்: அன்பின் பெயரில் அதீத உரிமை எடுத்துக் கொண்டதால் தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தனிமரமாக, ஏறக்குறைய மன நோயாளியாக, வாடும் அழகி வித்யா. தள்ளி இருந்த இந்த இரண்டு புள்ளிகளையும் அழகான கோடுகளால் இணைத்து, இன்னும் சில புள்ளிகளையும் கோடுகளையும் சேர்த்து உருவான கோலம்தான் தீக்குள் விரலை வைத்தால்.