Description
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியும் தவிப்பும் நிறைந்தது. கடந்த காலத்தியத் தாயக அனுபவங்களும், புலம்பெயர் நிலத்தின் நிகழ்கால அனுபவங்களுமாய் ஈரடுக்குத் தன்மையோடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கலை இலக்கியப் படைப்புவெளிகள் உயிர்ப்போடு திகழ்கின்றன. ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் தமிழ்ப் பொருண்மையின் தவிர்க்க முடியாத-தவிர்க்கக் கூடாத படைப்பு ஆவணங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நெய்தல் நாடனின் 'கூத்தாடிகள் விடுதி எனும் சிறுகதை நூலானது. ஈழத்தமிழர்களின் தாயக அனுபவங்களையும், புகலிட அனுபவங்களையும் புலப்படுத்துகின்றது. தாயக நிலத்தின் வெள்ளந்தி மனிதர்கள், தாயக விடுதலைக்குப் போராடியவர்கள், புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள், நம்பிக்கைத் துரோகிகள் எனப் பல்வேறு வகைப்பட்ட மனித அனுபவங்களை நெய்தல் நாடன் சிறுகதைகள் புலப்படுத்துகின்றன. ஈழத்தமிழர் புகலிட இலக்கிய வகைமைக்கு வளம் சேர்த்திருக்கும் நெய்தல் நாடனின் இலக்கியப் பணிகள் வளரும்; மிளிரும், வாழ்த்துக்கள்
-முனைவர் ஏர் மகாராசன்