Description
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, 'அப்போலோ முதல் ஆணையம் வரை' என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது.
* ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை.
* டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை.
* அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை.
* ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை.
* ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை.
* வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை.
என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்.