Description
கர்நாடக இசையுலகில் எம்.டி. ராமநாதன் ஒரு துருவ நட்சத்திரம். சங்கீத்ததால் அல்ல, சங்கீதத்துக்காக வாழ்ந்த நாதயோகி அவர். அவரது வாழ்வில் முக்கிய நிகழ்ச்சிகளைக் கவிதை வடிவில் முன்வைக்கும் இலக்கிய முயற்சி இந்த நீள் கவிதை. ஓர் இசைக் கலைஞரின் வாழ்வைப் பேசுபொருளாகக் கொண்ட ஆக்கம் ஒருவகையில் முன்னுதாரணமற்றது. பி. ரவிகுமார் மலையாளத்தில் எழுதிய கவிதையை அதன் உயிர்ப்பும் உணர்வு குன்றாமல் ‘எழுத்து’ காலக் கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தி தமிழாக்கியுள்ளார். இலக்கிய வாசகருக்கு இது இனிய சங்கீதம். இசை ரசிகருக்கு நூதன வாசிப்பு அனுபவம்