Description
பல்வேறு ஆய்வுகளின், சான்றுகளின் துணைகொண்டு தீண்டாமையின் தோற்றம், அதற்கான காரணம், அது உருவாகி வளர்ந்த விதம், அதன் காலம் என்பன பற்றி இதுவரை முன்வைக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளையும் விசாரணைக்குட்படுத்தி, தெளிவானதொரு மாற்றுப் பார்வையை முன்வைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர். நிகழ்கால ஆதாரங்களைக் கொண்டு கடந்தகால நிகழ்வைப் புரிந்துகொள்ளும் ஆய்வு முறையை அம்பேத்கர் முயன்றுள்ளார். கடந்தகாலத்தின் தொடர்ச்சியாக நிகழ்காலம் அமைகிறது என்பது இந்த ஆய்வின் உட்கிடை. சமகால இந்துச் சமுதாயத்தில் தீண்டப்படாத மக்கள் இருக்கும் நிலை குறித்த சொந்த/வாசிப்பு அனுபவங்கள், பிரிட்டிஷ் அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் கடந்தகாலத்தில் நிகழ்ந்த தீண்டாமையின் தோன்றுகையைப் பொருள்கொள்கிறார். நம் சமுதாயத்தின் முதன்மை முரணான தீண்டாமை பற்றி அறிந்துகொள்ளவும், அதை ஒழித்துக்கட்டவும் விருப்பம் கொண்ட எவரும் தவறவிடக் கூடாத நூல் இது.