Description
தரம், வாடிக்கையாளரின் நம்பிக்கை, நேர்மை, சோர்வடையாத முயற்சி, காலத்துக்கேற்ப மாற்றம் செய்தல் இவை அத்தனையும் இருந்தால், எந்தத் துறை சார்ந்த தொழிலாக இருந்தாலும் அதைத் தலைமுறை தலைமுறையாக வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடியும். இதற்குத் தமிழ்நாட்டில் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் உதாரணமாக உள்ளன. தலைமுறை தலைமுறையாக தொடரும் தொழில்களைப் போலவே, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளையே தொடந்து தலைமுறைதோறும் வாங்கும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட வெற்றிகரமான பாரம்பர்யத் தொழில் நிறுவனங்கள் சிலவற்றைப் பற்றி நாணயம் விகடனில் வெற்றித் தலைமுறை என்று வெளியான தொடரின் தொகுப்பு நூல் இது. ஏவி.எம்., போத்தீஸ், வி.ஜி.பி, அடையார் ஆனந்த பவன் போன்ற மூன்று, நான்கு தலைமுறைகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் இன்றைய தலைமுறையினர், எப்படி தங்களால் இப்படி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க முடிகிறது என்பதை இந்த நூலில் விளக்கியுள்ளனர். தலைமுறை தாண்டி நிற்கும் சாதனை நிறுவனங்களைப் பற்றி இனி அறியலாம்!