Description
சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று தரைவழி வாகனப் போக்குவரத்து. வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போவதால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படைகிறது. இதற்குத் தீர்வுகாண கண்டுபிடிக்கப்பட்டதுதான் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள். உலகம் முழுவதும் வாகனங்கள் எல்லாம் பேட்டரிமயமாகி வருகின்றன. பேட்டரி வாகனங்கள் புகை, இரைச்சல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பேட்டரி வாகனங்களே எங்கும் வியாபித்திருக்கும் நிலை உருவாகி வருகிறது. பேட்டரி வாகனத் தயாரிப்பின் தேவை, தயாரிக்கும் முறை போன்றவற்றை விளக்கி மோட்டார் விகடனில் வெளியான மொபிலிடி என்ஜினியர் என்ற பெயரில் வெளியான கட்டுரைகளில் தொகுப்பு நூல் இது. பேட்டரி வாகனங்களின் தயாரிப்பு முறைகள், பாதுகாப்பான பேட்டரி தயாரிப்பின் அவசியம், சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பு, பேட்டரி வாகனங்களில் நுகர்வோரின் எதிர்பார்ப்பு... என பேட்டரி வாகனங்களின் அனைத்து விஷயங்களையும் கதை வடிவில் ஐந்து கதாபாத்திரங்கள் மூலம் எளிமையாக விளக்குகிறது இந்த நூல். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பயணத்தை எளிமையாக்கும் பேட்டரி வாகனங்கள் பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி!