Description
ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடம். எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்கலாம். வெற்றி பெற்றவர்களின் வரலாறு நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது.
காலத்தை வென்று சரித்திரத்தின் பக்கங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். உலகப் பெரும் ஓவியர்கள், இலக்கியவாதிகள், தங்கள் ஓயாத போராட்டத்தால் மக்களின் விடுதலைக்கு உதவிய சமூகச் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், நேர்மையான அரசியல் தலைவர்கள் சிலரின் வரலாறுகள் சுருக்கமாக மாணவர்களின் மொழியில் தரப்பட்டுள்ளன. இதே சாதனையாளர்களின் வரலாற்றை முழுமை யாகப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை இந்நூல் தூண்டும்.