Description
உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கட்டுரைப் போட்டியில் பாரதிதாசனின் இரு நூல்கள் எனக்குப் பரிசாகக் கிடைத்தன. தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பேசுகிறார். நான் ஆர்வத்துடன் எடுத்துப் படிக்க ஆரம்பித்தது கத்தியை என்றாலும் முதலில் கேட்டு முடித்தது பாரதிதாசன் பேசுவதைத்தான்.
இந்து தமிழ் திசையில் இளம் வாசகர்களுக்காக நான் எழுதி வந்த பகுதியில் எனக்குப் பிடித்த பல ஆளுமைகளின் உடலுக்குள் கூடு பாயும் வாய்ப்பு அமைந்தது. உரிமை எடுத்து, அவர்கள் மொழியில், அவர்கள் நடையில் பல கட்டுரைகள் எழுதிப் பார்த்தேன். அவர்களுள் ஒருவர், பாரதிதாசன். பள்ளிக்கூட நினைவுகள் வர, எனக்குப் பிடித்த அவருடைய நூலின் தலைப்பையே கட்டுரைக்கு வழங்கினேன். இப்போது நூலும் அதே தலைப்பில் வந்திருக்கிறது.