Description
குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடியாகத் தோன்றி விரிவானதொரு ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த ஸூஃபித்துவத்தின் வரலாற்றில் நம்மால் பல முக்கியக் கட்டங்களையும் படித்தரங்களையும் காண முடிகிறது. கால வளர்ச்சியில் இஸ்லாமியச் சட்டக்கலையான ஃபிக்ஹு போன்றே ஸூஃபித்துவமும் தனக்கேயுரிய கலைச்சொற்களைக் கொண்ட தனியொரு கலையாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
அதன் தோற்றம், அது வரையறுக்கும் ஆன்மிகப் படிநிலைகள், ஸூஃபி தரீக்காக்களின் வளர்ச்சி, ஸூஃபிகளின் அறிவு மற்றும் சமூக நிர்மாணப் பணிகள் ஆகியவற்றை சுருக்கமாகவும் கச்சிதமாகவும் இந்நூல் முன்வைத்துள்ளது. ஸூஃபிகள் என்னும் ஆத்மஞானிகள் எவ்வாறு அறப்போராளிகளாகவும் திகழ்ந்துவந்தார்கள் என்பதற்கு தனியொரு அத்தியாயமே ஒதுக்கப்பட்டுள்ளது. பலராலும் ‘ஸூஃபித்துவத்தின் எதிரி’யாகப் பார்க்கப்படும் அறிஞர் இப்னு தைமிய்யாவின் உண்மை நிலைப்பாடுகளை சுவைபட எடுத்துரைத்துள்ளது.
அத்துடன் ஆன்மிகம், உளவியல் போன்ற தளங்களில் மேற்கத்திய, இஸ்லாமியக் கண்ணோட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் விளக்கியிருக்கும் இந்நூல், ஸூஃபித்துவம் பற்றி பரந்த கோணத்தில் அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நிச்சயமொரு நற்துணையாக இருக்கும்.