Description
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் கதை நிகழும் காரணிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். கதையடுக்கில் அவர்களின் இருப்பு என்பது ஒரு நிழலாட்டமாக உள்ளது. ஆனால் கதைகளின் போக்கில் அவர்கள் மீது பொருள்கொள்ளத்தக்க அழுத்தம் கிடைக்கிறது