Description
வாக்கு’ என்ற ஒரு சொல் கிராமங்களில் கைகளில் எடுத்த வாள் போன்றது. ஓங்கி வீசத்தான் முடியுமே தவிர கீழே வைக்கக் கூடாது. பின்வாங்க முடியாது. வாக்கு ஒரு சங்கல்பம். இந்த நாவலில் ஒரு பெண் தன் கனவில் வந்த தெய்வத்திற்கு அளித்த வாக்கிற்காகத் தன் வாழ்வை மனமுவந்து பணயம் வைக்கிறாள். விதியின் வலையில் சுற்றப்படும் அவள் வாழ்க்கை வழி ஊரும், உறவுகளும், தெய்வங்களும், மனித உணர்வுகளும் உருட்டப்படும், ‘வாக்கின்’ விளையாட்டு இந்த நாவல்.