பணக்குட்டி


Author: பிரதீப் செல்லத்துரை

Pages: 152

Year: 2024

Price:
Sale priceRs. 180.00

Description

கல்வி அட்டவணையில் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் நாம் ஜப்பானுக்கு நிகராக இருக்கிறோம். அதுவே பொருளாதாரம் குறித்தப் புரிதலில் நாம் குஜாரத்திகளில் பாதியளவு கூட இல்லை என்பதே உண்மை. இதற்குக் காரணம் 'வணிகத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறைவு' என்பதல்ல. பணத்தைக் குறித்தும், பணத்தைச் சரியாக சேமிப்பது குறித்தும், சேமித்த பணத்தை நமக்காக பணமாக குட்டிபோட வைப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை என்பதுதான். மொத்தத்தில் Education Literarcy இருக்கும் அளவிற்கு Financial Literarcy இல்லை. அளவுக்கு மீறி பணமிருந்தால் சந்தோஷம் போய்விடும் என்ற தத்துவத்தை மறந்துவிடுங்கள். பணத்தைப் பற்றி சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கை குறித்த புரிதல் உங்களுக்கு வந்துவிடும். பணத்திற்கு நாம் அடிமையாகாமல், பணத்தை நமக்கு அடிமையாக்கி வேலை செய்ய வைக்க வேண்டும் என்ற உண்மை உங்களுக்குப் புலப்படும். பள்ளி, கல்லூரியில் நாம் படிக்காத பணம் குறித்த விஷயங்களை. எதை எப்படிச் செயல்படுத்திப் பணத்தைக் குட்டிபோட வைத்துப் பெருக்கலாம் என்ற வழிமுறைகளை இந்தப் புத்தகம் உங்களுக்கு கற்றுத் தரும். உங்கள் கனவை அடைவதற்கான சாவியாகப் பணத்தை மாற்ற, ஒரு ஆசானாக இந்த நூல் உங்களுக்கு உதவும்.

You may also like

Recently viewed