Description
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந்தவர்களே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரபிகள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தத் தம்மால் இயன்ற விதங்களில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தை விவரிக்கிறது இந்நூல். சாகசங்களால் ஆன சரித்திரம் அவர்களுடையது.