கே. பாலசந்தர் வேலை - டிராமா - சினிமா


Author: சோம வள்ளியப்பன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

இயக்குநர் சிகரம் K B - சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், புன்னகை, அரங்கேற்றம், இரு கோடுகள், அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், மூன்று முடிச்சு, மரோசரித்திரா, ஏக் துஜே கேலியே, சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, தப்புத் தாளங்கள், அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், வறுமையின் நிறம் சிவப்பு, தில்லு முல்லு, புன்னகை மன்னன், நினைத்தாலே இனிக்கும், சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள், கல்யாண அகதிகள், கல்கி, பார்த்தாலே பரவசம், பொய் போன்ற திரைப்படங்கள்; ரயில் சினேகம், கையளவு மனசு, பிரேமி, சஹானா... போன்ற சின்னத்திரை தொடர்கள்; ரஜினி, கமல், ஸ்ரீதேவி, சுஜாதா, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் என்ற பல அறிமுகங்கள். அனந்து, வஸந்த், சுரேஷ்கிருஷ்ணா, சரண், அமீர், சமுத்திரக்கனி போன்ற இயக்குநர்களின் குருநாதர். கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதாசாகிப் பால்கே விருது, ANR நேஷனல் அவார்ட் போன்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவரே அவரைப் பற்றியும் அவரது அந்தக்கால எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்தும் சொல்லியவை இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அவரது வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்ள, அவரது ஆர்வங்கள் முயற்சி, உழைப்பு, வெற்றிகள் மற்றும் மேன்மை குறித்து மேலும் உலகம் அறிந்துகொள்ள இந்த அரிய தகவல்கள் கட்டாயம் பதிவுசெய்யவேண்டும் என்ற உந்துதலால் வெளிவரும் புத்தகம் இது. இயக்குனர் இமயம் அவர்களுடன் தனிமையில், தனி ஒருவனாக, நேருக்குநேர் பல நாட்கள், பலமணி நேரங்கள் பேசியபோது அவரே சொல்லிய தகவல்கள் இவை. தகவல்களில் சில அரியனவாக சில புதியனவாக இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நிச்சயம் மிகச்சரியாக இருக்கும் என்பதில் எந்த அய்யமும் தேவையில்லை. - சோம.வள்ளியப்பன்

You may also like

Recently viewed