Description
கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்றன. மிகவும் பிடித்த வேலையே சில சமயம் வெறுக்கத்தக்கதாக மாறிவிடும் சமயங்களில், மனதுக்கு சரி என்று பட்ட முடிவுகளைத் துணிச்சலாக நான் எடுத்ததால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடிந்தது. எதனுடனும் ஆழ்ந்த பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் சற்று விலகி நின்று வேடிக்கை பார்க்கும் வித்தையைக் கற்றுக்கொண்டபின் ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல் எல்லாருடனும் அவர்களை அவர்களாகப் புரிந்துகொண்டு பழக முடிந்தது. மனிதர்களை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதும் ஒரு கலைதான். அதற்கு எழுத்துதான் சிறந்த வழி.
- உமா ஷக்தி